எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளியின் ஆசிரியர் தினம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளியின் ஆசிரியர் தினம் இன்று(ஒக்ரோபர் 13) காலை முன்பள்ளியின் தலைவர் ம. சிலோசனா தலைமையில் முன்பள்ளியில் சிறப்புற இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக எழுவைதீவு பங்குத்தந்தை அருட்திரு .யூட் கெமில்டன் அடிகளாரும் , சிறப்பு விருந்தினர்களாக முருகவேள் வித்தியாலய அதிபர் இ. கயூறன், றோ. க. த. க. வித்தியாலய அதிபர் ஜெ. கொலின்ரன் ஆகியோரும் கௌரவ விருத்தினராக பத்திமா சனசமூக நிலைய தலைவர் யோ.லோ. சா. குயின்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது முன்பள்ளி ஆசிரியைகள் ப. ஜீவராஜேஸ், யே.நிரஞ்சினி ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Share this Article