எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாதாம்!- கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

டீசலின் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று (நவம்பர் 30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாக குறைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.

Share this Article