எரிபொருள் கியூஆர் முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எரிபொருள் விநியோகத்துக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டு முறைமையின் கீழ் இனி வாராவராம் செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இன்று காலை(மார்ச் 8) அனைத்து கியூஆர் கணக்குகளுக்கும் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் எரிபொருள் ஒதுக்க அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய களஞ்சியங்கள் முனையம் என்பவற்றுக்கு ஏற்படுகின்றன விநியோகச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article