எதிர்வரும் நாட்களில் குறையவுள்ளது பாணின் விலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எதிர்காலத்தில் பாணின் விலையை குறைப்பது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது.

தற்போது பாண் இறாத்தல் ஒன்று 170 முதல் 180 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாணின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பல்வேறு வெதுப்பக உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பாணின் விலையை குறைப்பதற்கு குறித்த சங்கம் ஆலோசித்து வருகின்றது என்று அறியமுடிகிறது.

எதிர்வரும் நாட்களில் இதற்கான அறிவித்தல் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this Article