ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலய முன்றலில் தீப்பாசறை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய இளையோர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் தீப்பாசறை நிகழ்வானது பங்குத்தந்தை ஜெயறஞ்சன் அடிகளாரின் ஆலோசனையிலும் வழிநடத்தலிலும் இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை புனித ஜோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நேற்று (செப்ரெம்பர் 10) ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலய முன்றலில் இந்த தீப்பாசறை நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு ஊர்காவற்றுறை திருக்குடும்ப கன்னியர்மட கல்லூரி முதல்வர் அருட்சகோதரி தயாநாயகி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இளைஞர் யுவதிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் போட்டிகளுடன் கவிதை, பாட்டு, நகைச்சுவை, விடுகதை உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share this Article