ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலயத்தில் மாணவர்களை ஊக்குவிக்க போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஊர்காவற்றுறைப் பங்கு பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவும் போட்டிகள் பங்குரீதியாக நடாத்தப்படவுள்ளது.

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலயத்தில் இந்த போட்டிகள் இன்று(ஜூன் 11) காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

போட்டிகள்
பிரிவு 01 – சித்திரப் போட்டி (தரம் 1,2,3,4}
தலைப்பு -01.இயேசுவின் அன்பு பிள்ளைகள் நாம்
பிரிவு 2 – கவிதைப்போட்டி (தரம் 5,6,7)
தலைப்பு -01.அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர்
02.இறைவார்த்தையை தாங்கிய அன்னை மரியாள்
03.நற்செய்தியின் இறைமனிதர் புனித அந்தோனியார்
பிரிவு 3 வினாவிடைப் போட்டி (தரம் 8,9,18,11)
வினாக்கொத்துப்பரீட்சை இடம் பெறும்.

போட்டி விதி முறைகளாக சித்திரம் A4 தாளில் வரையப்பட வேண்டும். அதற்குரிய பொருட்களோடு வருகைதரவும், கவிதைப் போட்டியானது தலைப்பினை ஆயத்தப்படுத்திய பின்னர் அதனை வாய்மொழிமூலம் ஒப்புவித்தல் வேண்டும், குறைந்தது 6 வரிகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும், வினாவிடைப் போட்டியானது 36 வினாக்களை உள்ளடக்கியாதாகக் காணப்பட வேண்டும்.

Share this Article