ஊர்காவற்றுறை LDSP அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச சபையினால் 2023/2024 ஆண்டுகளில் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிதியின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள LDSP அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் முதற் கட்ட கலந்துரையாடல் நேற்று (செப்ரெம்பர் 25) பிரதேச சபை தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் மதியம் 2:00 மணியளவில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் , மற்றும் சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அபிவிருத்தித் திட்ட தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலானது மக்களினால் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை அடையாளம் கண்டு செயற்ப்படுத்தும் செயற்றிட்டமாக அமைந்தமை சிறப்பம்சம் என்பதுடன் அபிவிருத்தியில் நீடித்து நிலைத்திருக்கும்தன்மை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article