உழவியந்திரத்துடன் மோதி 17 வயதுச் சிறுவன் மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி, யூனியன்குளத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த யூனியன்குளம், கோணாவிலைச் சேர்ந்த 17 வயதுடைய இ.இசையமுதன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பயனிக்காது உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article