உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தகவல் திணைக்களத்தின் அறிவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானியை அச்சிடுவதற்குரிய பணிப்புரை அரசாங்க அச்சகத்துக்கு இதுவரை அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும் எனவும், அது எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share this Article