உள்ளூராட்சி தேர்தல்: அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் திகதி அறிவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கான வேட்புமனுக்கள் இந்த மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நண்பகல் வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதியான விண்ணப்பதாரிகள் அதற்கான விண்ணங்களை நாளை (ஜனவரி 5) முதல் சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

Share this Article