உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அதிலும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article