உள்நாட்டு கடன் மறுசீரமைப்புடன் தொடர்பான வர்த்தமானி வௌியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புடன் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் படுகடன் பதிவாளருக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகாரம் வழங்கப்படுகின்றது.

அத்துடன், ஜூன் 28 ஆம் திகதியன்று இருப்பிலிருந்த பங்குகள் அல்லது பிணையங்களின் ஒரு பகுதியை மாற்றுகின்ற அல்லது பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான அதிகாரமும் வழங்கப்படுகின்றது.

திறைசேரி முறிகளை உருவாக்கும் போதும் வௌியிடும் போதும் ஏற்படும் ஏதேனும் செலவுகளை செலுத்துவதற்கான அதிகாரமானது, தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் படுகடன் பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Share this Article