உடல் இந்தியக் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உடல் இந்தியக் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மேற்கு பனங்கானி முனையில் இருந்து கடந்த முதலாம் திகதி (ஜீலை 01) தொழிலுக்கு சென்ற நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் (வயது 65) என்பவர் இன்றைய தினம் (ஜீலை 07) இந்தியாவில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் இந்தியாவின் வேதாரண்யம் கோடியா கடற்கரையில் கரையொதிங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது நீரில் காணப்பட்டமையால் உடல் அழுகிய நிலையில் தலை சேதமடைந்து கரையொதிங்கியது.

இவரது உடல் மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரை மணலில் புதைத்துள்ளதாக தகவல்கள் நெடுந்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ஊடகங்களும் இந்திய ஊடகவியலாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

Share this Article