இலங்கையில் மீண்டும் கொவிட் தடுப்புக் கட்டுப்பாடுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கொவிட் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

கொவிட் தடுப்பூசி அட்டை இல்லாதவர்கள் 72 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Article