இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளார். எனினும் அவரது வருகைக்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற பின்னர் ஜெய்சங்கர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை முன்னெடுத்துவரும் சந்தர்ப்பத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இனப்பிரச்சினை உட்படப் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Article