இருளில் ழுழ்கிய இறந்த ஆத்துமாக்கள் கல்லறைக்கு ஒளியூட்டப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மத்தி இறந்த ஆத்துமாக்கள் கல்லறைப் பகுதி நீண்ட காலமாக இருளில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது.

இந் நிலைமையினைக் கருத்திற் கொண்டு நெடுந்தீவு இளைஞர்களது வேண்டு கோளினை ஏற்று லண்டனில் வசித்து வரும் நெடுந்தீவினை சேர்ந்த திரு யோன்சன் அவர்களால் இன்றைய தினம் பிரகாரசமான மின்விளக்கு பொருத்தப்பட்டது.

நாளைய தினம் (ஜீலை 19) தனது மனைவியாரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இச் செயற்பாட்டினை அவர் மேற்கொண்டிருந்ததுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 06 மின்குமிழ்கள் அவரினால் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தரித்து நிற்கும் மேற்குப் பகுதியில் இருளில் இருப்பதாக கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தினைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Article