இரு மாதங்களின் பின்னர் “கியூஆர்” தேவையில்லை!- வலுசக்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எதிர்வரும் இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

திவுலப்பிட்டியில் நடந்த நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர்.

அவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிரப்பு நிலையங்களில் கியூஆர் முறைமை நடைமுறையில் உள்ளதால் எரிபொருளுக்காக வரிசைகள் ஏற்பட்டுள்ளன.

இன்னும் இரண்டு மாதங்களில், 150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.

அந்த நிறுவனம் விநியோகத்தை ஆரம்பித்ததன் பின்னர், அது தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கும். அதன்பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் குறியீட்டு முறைமை நீக்கபடும் என்றார்.

Share this Article