இரத்ததான முகாம் இடம் பெறவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு கிளையினால் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜீலை 18) நெடுந்தீவு பிரதேச வைத்தியாசாலையில் இடம் பெறவுள்ளது.

தற்போதைய காலப்பகுதியில் குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் இரத்தான நிகழ்வில் நெடுந்தீவில் வாழும் குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி உயிர் காக்கும் உன்னதப்பணியில் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

நெடுந்தீவில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இரத்தான முகாமினை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சங்கங்கள் சமாசங்கள், இளைஞர் சம்மேளனங்கள் சனசமுக நிலையங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தங்கள் அமைப்பு சார்ந்த குருதிக்கொடையாளர்களை இந் நிகழ்வில் பங்கு பற்ற ஊக்குவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்;கள்.

மேலதிக தொடர்புக்கு திரு.எ.அருந்தவசீலன் தலைவர் இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளை 0776624121

Share this Article