ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மண்ணின் மைந்தன் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான – BIshop cup 2025  வீரர்கள்  தெரிவுக்கான இரண்டாம் கட்ட நிகழ்வு நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார்தலமையில் நேற்றைய தினம் (ஜூலை 11) நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயவளாகத்தில் இடம்பெற்றது.

இடம்பெறவுள்ள விளையாட்டுகளில் கிளித்தட்டு மற்றும் கரப்பந்தாட்டம்ஆகியவற்றுக்காக ஆண், பெண் அணி வீரர்கள் ஏலம்பெறும் நிகழ்வுஇடம்பெற்றது.

இதேவேளை மென்பந்து கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகளுக்காகஅணி வீரர்கள் தெரிவுக்கான ஏல நிகழ்வு கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளில்

01. சென்.பிலிப் அணி

02.சென்.கென்றி அணி 03.சென்.பற்றிக் அணி

04.மடு அன்னை அணி

05.சென்.பீற்றர் அணி

என பெயரிடப்பட்ட அணிகள்  போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article