ஆபத்தான நிலைமையில் 75 இலட்சம் இலங்கையர்கள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சில மாகாணங்களில் சுமார் 88 வீதமான மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Article