அல்லைப்பிட்டியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அல்லைப்பிட்டிக் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கரையோதுங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (மே 13) மாலை அல்லைப்பிட்டிக் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் உடற்பாகங்கள் பல சிதைந்து காணப்படுவதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article