அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மைதானத் திறப்பும், மெய்வல்லுநர் போட்டியும்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் மைதானத் திறப்பு விழாவும், வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வும் கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.

வித்தியாலய அதிபர் கோ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக வித்தியாலய பழைய மாணவி திருமதி கலாதேவி அருணாசலமும், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.சகிலனும் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையும், தீவக மறைக்கோட்ட முதல்வருமான அருட்பணி ஜே.எக்ஸ்.பேணாட் றெக்னோவும், நல்லூர் சிவாகம பீடம் சிவஸ்ரீ கி.ஜனேந்திர சிவாச்சாரியாரும், பிரான்ஸில் வசிக்கும் பாடசாலை பழைய மாணவரான த.கேதீஸ்வர மூர்த்தியும் கலந்து கொண்டனர்.

மைதானத்துக்கான காணியை வைத்திய கலாநிதி வாசுகி குருசாமி அன்பளிப்புச் செய்திருந்தார்.

Share this Article