அராலி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நெடுந்தீவு இளைஞர் காயம்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அராலி சந்தியில் இன்று (09/09) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நெடுந்தீவு இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் குறிகாட்டுவான் செல்வதற்காக யாழ் – ஊர்காவற்றுறை பிரதான வீதி , அராலி சந்தியில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் குறித்தநபர்மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவரை மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Article
Leave a comment