அரச பஸ்களில் கட்டணம் செலுத்துவதற்கு கியூஆர் முறைமை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரச பஸ்களில் பணம் செலுத்தாமல் கியூஆர் அட்டை முறைமை மூலம் பற்றுசீட்டுக்களைப் பெறும் முறைமை இந்த ஆண்டு நிறைவுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புதிய பஸ்களின் ஒரு தொகுதி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள டிப்போக்களுக்கு இன்று (ஏப்ரல் 9) வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய கியூஆர் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தி அதன்மூலம் பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான புதிய பொறிமுறை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article