அப்பா பாடல் வெளியீடு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கே.கே.சகோ இசைத் தயாரிப்பில் தந்தையர் தினத்தினை முன்னிட்டு தந்தையை சிறப்பிக்கும் வகையில் பாடலாசிரியர் வெற்றி துஸ்யந்தனின் தயாரிப்பில் இன்னிசை வித்தகன் சி.சுதர்சனின் இனிய இசையில் நெடுந்தீவு மாவிலி செல்வனின் இனிய குரலில் நாளை (ஜீன் 20) தமிழாழி தொலைக்காட்சியில் வெளிவருகின்றது.

இப்பாடலுடன் அருள் மிகு கருமாரியம்மன் பக்திப்பாடலும் வெளியீடு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கே.கே.சகோ இசைத்தயாரிப்பில் கடந்த காலங்களில் பல்வேறு பாடல்கள் குறிப்பாக நெடுந்தீவு நெழுவினிப்பிள்ளையார் புகழ் நெழுவினி கீதங்கள், நயினாதீவு அம்மாள் புகழ் நயினை ராகம் நல்லூர்; முருகன் புகழ் நல்லூர்; நாயககே பாடல், திருமலை சிவன் மலை பாடல் என பலர் போற்றும் பக்திப்பாடல்கள் வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனிய பல பாடல்களை தேன் தமிழ் மொழியில் K.K. BRO MUSIC Youtube Channal ஊடாக கண்டு கழிக்க முடியும்

Share this Article