அபிவிருத்திக்கான பொதுமக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் காரைநகரில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 30 ஆம் திகதி சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் காரைநகரில் முன்னெடுகப்படவுள்ளன.

பி.ப 2.00 மணிக்கு காரைநகர் பிரதேசசபை தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

2023/2024 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடலாக இது அமைகிறது.

கலந்துரையாடலில் பொதுமக்களையும் பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், விசேட தேவையுடையோர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் தவறாது கலந்து கொண்டு, பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை வழங்கியுதவுமாறு காரைநகர் பிரதேச சபையினர் கோரியுள்ளனர்.

Share this Article