அனலைதீவுக்குச் சென்று பிரச்சினைகளை கேட்டறிந்த சஜித்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (பெப்ரவரி 23) அனலைதீவில் இடம்பெற்ற அரசியல் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இரு நாள் பயணமாக டியாழ்ப்பாணம் வந்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்சிகளிலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் பங்கேற்று வருகின்றார்.

நேற்று மதியம் அனலைதீவுக்குச் சென்ற அவர் அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

Share this Article