அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடம் மறுசீரமைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் பாவிக்க முடியாத நிலையில் இருந்த விஞ்ஞான ஆய்வுகூடத்தை மாணவர்களின் கற்கைக்கு தகுதியான முறையில் 13 இலட்சம் ரூபா செலவில் மறுசீரமைத்து மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்க்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தின் தமிழ் தந்த ஆசான் திரு. நல்லையா தங்கவேலு அவர்களை நினைவேந்தும் வகையில் அவர் நினைவாக இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகத்தோடு துணைநின்று தமிழ்மொழியையும் அம்மொழியினூடாக உலகத்தையும்
அறிமுகப்படுத்திய பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. நல்லையா தங்கவேலு அவர்களை பெருமைப்படுத்திய 1987 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களுக்கு நன்றியை தற்போதைய அதிபர் திரு. நா.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Share this Article