NPP இன் நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளர் மீது நெடுந்தீவில்தாக்குதல்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீதும் கட்சி உறுப்பினர் மீதும் இன்று (மே0 05)  இரவு 8.00 மணியளவில்  நெடுந்தீவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

நாளை தேர்தல் நடவடிக்கைகளுக்கான பணிகளில் ஈடுபட்ட பின்னர் வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் அருகில் மறைந்திருந்தோர் பாரிய ஒளியினை வீசி வேட்பாளர் மீது பொல்லுகளால் தாக்குதல் நடாத்தியதாகவும் அதனை தடுக்க சென்ற இன்னொரு உறுப்பினர் மீதும் தாக்குதல் நடாத்திவிட்டு  தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலையில் காயமடைந்த நிலையில் வேட்பாளர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அவருடன்  கட்சியின் மூத்த உறுப்பினரும் காயங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளர் முருகேசு அமிர்தமந்திரன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர் அ.கணபதிப்பிள்ளை ஆகியோரே தாக்குதலில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article