Wednesday, December 7, 2022

தீவகச் செய்திகள்

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், நயினாதீவு மத்தியவிளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20 நவம்பர்) இடம்பெற்றது. காலை 09...

சுற்றுலா வந்த பெண்ணுடன் சேட்டை; 9 இளைஞர்களுக்கு ஒத்திவைத்த சிறை!

காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்தது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தவிட்டுள்ளது.    ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகருக்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரின் நண்பரும்...

ஊர்காவற்றுறையில் உணவு வழங்கும் நிலையம் திறந்து வைப்பு

பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக ஊர்காவற்றுறையில் வறிய நிலையிலுள்ள முதியோர்களுக்கு இலவசமாக மதிய போசனம் வழங்குவதற்கென உணவு வழங்கும் நிலையம் நேற்று முன்தினம் (29 செப்டம்பர்) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகல் 02 மணிக்கு, பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலியின் பணிப்பாளருமான...

நயினாதீவு மாணவி உயரம் பாய்தல் நிகழ்வில் முதலிடம்

நயினாதீவு கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மாணவி துயாளினி மாகாணமட்ட 18வயதுப்பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தை பெற்று தேசிய மட்டம் தெரிவாகியுள்ளார். இ‌ன்றைய தினம் (30-09-2022) யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாண மட்ட 18 வயதுப் பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் செல்வி.ஸ்ரீகிருஸ்ணன் துயாளினி அவர்கள் 1ம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இரண்டாம் கட்ட காசோலைகளை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

தீவகப் பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் பாசி வளர்ப்பு போன்ற ஊக்குவிப்பு  திட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன. வேலணை பிரதேசத்தில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில், முதற் கட்ட காசோலையைப் பெற்றுக் கொண்ட பயனாளர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர், சிறந்த செயற்பாடுகளை...

மாதிரிச்சந்தை சிறப்புற நடைபெற்றது

எழுவதீவு முருக வேல் வித்தியாலய மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று வியாழக்கிழமை (29.09.2022) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வித்தியாலய முதல்வர் திரு.சி.கயூரன் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் தீவக கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.ஞானசீலன், தீவக கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.செல்வக்குமார், யா/ எழுவைதீவு...

ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் கைது

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர்...

தமிழக மீனவர்கள் கைது!

எட்டு தமிழக மீனவர்கள் காரைநகரில் கைது! இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு - ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று எட்டு மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடிப் படகே காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினரிடம் இன்று சிக்கியது. படகுடன் கைதுசெய்யப்பட்ட எட்டு மீனவர்களும் மயிலிட்டித் துறைமுகத்துக்குக் கொண்டு...

அனலைதீவில் கரையொதுங்கிய மனித எச்சங்கள்

அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில், மனித எச்சங்கள் கரையொதுங்கிய கடற்கரைக்கு அருகாமையில் மயானம் காணப்பட்டதாகவும் அதிலிருந்து மனித எச்சங்கள் கடல் அரிப்பின் மூலம் வெளிக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். வேறு சிலர் கருத்து தெரிவிக்கையில் கடலில் காணாமல் போனவரின் மனித எச்சங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர்...

வேலணையில் தாய், மகள் மீது கத்திக்குத்து 

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  வேலணை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13 மார்ச்) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகியோர் மீது நபர் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி...
- Advertisement -spot_img

Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img