காங்கேசன்துறை – நாகபட்டிணம் கப்பல் சேவை மே நடுப்பகுதியில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும்13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது.

இந்தக் கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மேமாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கிச்செல்கிறது.

அங்கு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துக் கொண்டு நாகை செல்லும் கப்பல் மே11 திகதி அங்கிருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடும்.

மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் நாகையில் இருந்துகாலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையைவந்தடையும். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டுமாலை 6 மணிக்கு நாகையைச் சென்றடையும்.

இரு வழிப் பயணத்துக்கு அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபாஅறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலில் மொத்தமாக 150 இருக்கைகள் இருப்பதாகவும் ஒரு வழிப்பயணத்துக்கான நேரம்நான்கு மணித்தியாலம் எடுக்கும்.

அத்தோடு ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளைஎடுத்துச் செல்ல முடியும்.

Share this Article