பாடசாலை மாணவியை காணவில்லை – பெற்றோர் முறைப்பாடு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடுதிரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை (27) சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச்செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாதகாரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுஅளித்துள்ளனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல்போயுள்ளார். மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டைஅடிப்படையாக வைத்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளைமுன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article