தீவகத்தில் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்குகுறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு, அனலைதீவு , எழுவைதீவு உள்ளிட்ட சில தீவுகளில்காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படமாட்டாது. எனவே இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களிற்குகுறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

Share this Article