வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் மரணச் சடங்குகளின் போது வீடுகளில் பட்டாசு கொழுத்துவது முற்றாகத் தடை செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதி சபை அமர்வு கடந்த சனிக்கிழமை…
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இன்று (28/12) அதிகாலை குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.…
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ச. ஸ்ரீ பவானந்தராஜா அவர்கள் கடந்த வாரம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார். தீவகப் பகுதி மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த வைத்தியசாலையின் தற்போதைய…
கண்டன அறிக்கை தையிட்டி போராட்டத்தில் வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டதையும் கைது செய்யப்பட்டதையும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழர்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுவதையும், தமிழர் தாயக பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்தமயமாக்கப்படுதலையும் இந்நாட்டு பிரஜைகளுக்கும்,…
யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் போதை மாத்திரைகளுடனும், ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட 08 கலை இலக்கிய மன்றங்களுக்கான ஆற்றுகைப்பொருட்களும் பதிவு செய்யப்பட்ட…
உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு தோற்கடிக்கப்படுவது திசைகாட்டியின் வரவு செலவுத் திட்டம் அல்ல, மக்களின் வரவு செலவுத் திட்டமே என அவர்…
யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி…
குளிர்கால டெவின் புயல் காரணமாக அமெரிக்காவில் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டு தாமதமாகிவிட்டதாக விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்அவேர் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலத்தில் இவ்வாறான ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளமை விமானப் பயணத்தில் ஒரு பெரும் அடியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
பரந்தன் - முல்லைத்தீவு A-35 வீதியில் அண்மையில் புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் தற்காலிகமாக அமைத்த பகுதியில் இருந்து தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக சென்ற போது நேற்று (27/12) மாலை…
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (27.12) காலை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களால் இன்று (27/12) சனிக்கிழமை இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய உதவிப் பணிப்பாளர் பேராசிரியர் சபா ஆனந்த், கலாநிதி கேதீஸ்வரன்…
பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட…
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC ) தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆறு அமைச்சர்களின் சொத்துகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரா தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.…
மலேசியாவில் நடைபெற்ற 'சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0' சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில், இலங்கை தேசிய தமிழ் விவாத மேம்பாட்டுக் குழு சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்தத் தொடரின் வரலாற்றில் மலேசியாவைச் சேராத ஒரு நாடு சாம்பியன்…
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜா-எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account