BERENDINA நிறுவனத்தினால் வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று(செப்ரெம்பர் 26) முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது.

BERENDINA நிறுவனமானது நாடளாவிய ரீதியில் பல வருடங்களாக பல்வேறுபட்ட உதவித்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 700 வீட்டுத்தோட்ட பயனாளிகளில் 60 பயனாளிகளுக்கு இன்று தலா 3500 ரூபா உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திரு. க.கனகேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் வங்கி முகாமையாளர்,BERENDINA நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article