நாளை அவசர தேவைகான போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்கள் அவசர போக்குவரத்து தேவைகளின் நிமித்தம் நாளை (மே – 25) யாழ் சென்று மீளவும் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நளை காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் நெடுந்தாரகைப் படகு மீளவும் 03.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என பிரதேச சபைத் தவிசாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இப் படகின் மூலம் பிரயாணம் மேற்கொள்ளவுள்ள மக்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாளை காலை 06.30 மணிக்கு யாழில் இருந்து பேருந்து புறப்பட்டு காலை 08.30 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறை முகத்தில் இருந்து மீளவும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதுடன் மாலை 3.00 மணிக்கு திரும்பும் படகுக்கு ஏற்ப பேருந்து மதியம் 01.00 மணிக்கு யாழில் இருந்து புறப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெரமுன கட்சியின் தீவக இணைப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவசர தேவைகளின் நிமித்தம் யாழ் செல்லவுள்ளவர்கள் பயணக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைவாக அனுமதிக்கப்படவுள்ளதுடன், மக்களும் தேவையற்ற பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. கொரோனா தாக்கத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் எமது எமது தீவகத்தினை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் பொறுப்புக் காணப்படுவதனை உணர்ந்து செயற்படுதல் மிக மிக அவசியம்

Share this Article