மக்கள் போக்குவரத்திற்கு வருகின்றது காளிகாம்பாள் 02 படகுச்சேவை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்து என்பது காலம் காலமாக காணப்படுகின்ற ஓர் பிரச்சனையே பல்வேறு அதி நவீன படகுகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போதும் அனைத்தும் தற்போது செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

அந்த வகையில் நம் மக்களது போக்குவரத்து மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதற்கு ஏற்றவிதத்தில் நெடுந்தீவினை சேர்ந்த திரு.தம்பையா நகுலேஸ்வரன் (நெல்சன்) அவர்களால் புதிய படகு காளிகாம்பாள் 02 எனும் பெயரில் நெடுந்தீவிற்கு வருகை தந்துள்ளது.

ஏற்கனவே ஒரு காளிகாம்பாள் எனும் பெயரில் படகுச் சேவையினை நடாத்தி வரும் நகுலேஸ்வரன் அவர்களது முயற்சியின் பயனாக காளிகாம்பாள் 02 எனும் படகும் நேற்றைய தினம் (ஏப்ரல் 11) நெடுந்தீவிற்கு வருகை தந்துள்ளது.


மிக விரைவில் இப்படகு மக்கள் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளதுடன் பாதுகாப்பான முறையில் மக்கள் பயணிக்கும் முறையிலும் பொருட்கள் கொண்டு செல்வக்கூடிய முறையிலும் சிறப்பான முறையில் வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது

Share this Article