மிக விரைவில் வெளிவருகின்றது – பசுவூர்க்கோபியின் இரண்டாவது பாடல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நம் நெடுந்தீவின்  மைந்தன் பசுவூர்க்கோபி அவர்களின் இரண்டாவது பாடல் விரைவில் வெளிவரவிருக்கின்றது.
தற்போது நெதா்லாந்த தேசத்தில் வாழ்ந்து வருகின்ற இவா் தமிழ் மொழி மீதும் எம் தாய் மண் நெடுந்தீவு மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவா். பல்வேறு கவிதைகளை வெளியீட்டு வருவதுடன், ஆதியுலகம் எனும் சஞ்சிகையினையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் வெள்ளி விழாவில் வெளியீடு செய்யப்பட்ட ”நெடுந்தீவு அழகான தீவல்லவோ” எனும் பாடல் வாிகள் மூலம் எல்லோா் மனங்களிலும் இடம் பிடித்த பசுவூர்க்கோபியின் இரண்டவது பாடல் ”எழு எல்லாம் இயலும்” எனும் பாடல் மிக விரைவில் வெளிவரவுள்ளது.
ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.(பசுவூர்க்கோபி) அவா்களின் எழுத்துருவாக்கத்தில் உருவான இப்பாடல் எமது தீவக மைந்தன் நெடுந்தீவு க.யோகேஸ் அவா்களால் இசை அமைத்து பாடப்படுகின்றது
வெளியிடப்படும் பாடலுக்கான இணை அனுசரணை – ஆதியுலகம்
Share this Article