அருணலு கடன் வழங்கும் நிகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமுர்த்தி வங்கியில் நேற்று (மாா்ச் 05) அருணலு கடன் வழங்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ. பாமினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பொதுஜன பெரமுன கட்சியின் நெடுந்தீவு இணைப்பாளர் , பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கலந்துகொண்டதோடு உரியவர்களுக்கு கடன்களை வழங்கி வைத்து சிறப்பித்தனர்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு வாரத்தை முன்னிட்டு நெடுந்தீவு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களான யூதா, வாசுகி, பாலமுருகன் ஆகிய சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு தலா ரூ. 100 000.00 வீகிதம் கடன் வழங்கப்பட்டதுடன் ஆலோ கடன் திட்டம் ( உள்ளக வீட்டு மின் சுற்றுக்கான உதவி கடன்) இதற்காக ஒரு குடும்பத்திற்கு ரூ. 20 000.00 தும் வழங்கி வைக்கப்பட்டடது என்பது குறிப்பிடத்தக்கது.
Share this Article