மூன்றாவது நாளாகவும் தேடுதல் தொடா்கின்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி கண்ணாடி இழைப்படகில் பயணித்த இருவா் கடந்த ஞாயிறு முதல் காணமல் போயிருந்தனா் அவா்கள் பயணித்த படகும் இயந்திரமும் கரையொதிங்கியிருந்தது.

கடலில் ஏற்பட்ட தீடிா் காற்று மற்றும் மழைகாரணமாக தவறி கடலில் வீழ்ந்திருக்க கூடும் என கருதுகின்ற போதும் அவா்களை தேடும் பணி இன்று மூன்றாவது நாளாகவும் தொடா்கின்றது.

நேற்றைய தினம் கடற்தொழில் படகுகளுடன் கியுமெடிக்க அம்புலன்ஸ் படகும் தேடுதலில் ஈடுபட்டது. இன்றைய தினமும் கடற்தொழிலாளா்களின் படகுகள் தொடந்தும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இச் சம்பவத்தினால் நெடுந்தீவு மிகவும் சோகத்தில் அழ்ந்துள்ளது.

Share this Article