சுற்றுச்சூழல் மாதம் இன்று ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“நெடுந்தீவினை காதல் செய்வோம்”
எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பால் எம் தாய்மண்ணை நெகிழிக் கழிவுகள் (பிளாஸ்ரிக்) இல்லாத் தீவாக மாற்றுவதற்காக ஒரு மாதம் (14 பெப்ரவரி முதல் 13 மார்ச்) செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப நாள் அதாவது சுற்றுச் சூழல் மாதத்தின் ஆரம்ப நாள் நிகழ்வானது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 14) காலை 9:00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

 

இந்நிகழ்வில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொண்டர் அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் ஊரின் உறவுகள் அனைவரையும் கலந்து சமூகம் சார்ந்த பணிகளில் பங்களிப்பு நல்குமாறு அன்போடு அழைத்து நிற்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

Share this Article