உழவா் தின விழா பின்போடப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு முற்போக்கு வாலிப இயக்கத்தினால் நடாத்தப்படவிருந்த உழவா் தின விழா கொரோனா நிலமையினைக் கருத்திற் கொண்டு நிகழ்வு பின்போடப்பட்டுள்ளது என நிா்வாகத்தினா் எமது செய்தி தளத்திற்கு அறிவித்துள்ளனா்.

30 வருடங்களுக்கு முன்னா் நெடுந்தீவில் முற்போக்கு வாலிப இயக்கத்தினால் பொங்கல் விழா சிறப்பா வருடம் தோறும் மேற்கொள்ளப்பட்டு வந்தது ஆயினும் நாட்டு நிலமையினால் அனைவரும் இடம் பெயா்ந்தமையால் அவை இடம் பெறவில்லை.

ஆயினும் கடந்த வருடம் மீண்டும் இணைந்து பொங்கல் விழாவினை ஆரம்பித்து தங்கள் செயற்பாடுகளை நெடுந்தீவில்  ஆரம்பித்து வைத்தனா் தொடா்ச்சியாக இவ்வருடமும் இவ்விழாவினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிகழ்வினை பிற்போட்டுள்ளனா்.

Share this Article