ஆாியகுளம் சைவ உணவகம் முடகக்பப்டடுளள்து

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் இன்று முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை, புலோலியின் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர், இந்த உணவகத்துக்கு வந்திருந்தார் என்பது தெரியவந்ததை அடுத்தே இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.

தொற்றாளர் கடந்த 31ஆம் திகதி இந்த உணவகத்துக்கு வந்து உணவருத்திச் சென்றார் என்று விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, உணவகம் முடக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றும் 11 பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Share this Article