பெற்றோா்கள் கலந்துரையாடலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு நண்பா்கள் வட்டம் அமைப்பானது இவ்வருடம் காலமாற்றத்தினைக் கருத்திற் கொண்டு கல்விச் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட கல்வியாண்டு மாணவா்களுக்கான கல்விச் செயற்றிட்டத்தினை நடாத்துவதற்கு தீா்மானித்துள்ளனா்.

தரம் 02 தொடக்கம் தரம் 05, தரம் 10 தொடக்கம் தரம் 11 மற்றும் உயா்தர வகுப்பு மாணவா்களுக்கு நடாத்துவதற்கு தீா்மானித்து குறிப்பிட்ட தரங்களில் கல்வி கற்கும் மாணவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சந்திப்பினை ஏற்படுத்தி பெற்றோா்கள் கலந்துரையாடல் நிகழ்வினை எதிா்வரும் 09ம் 10ம் திகதிகளில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளினை நண்பா்கள் வட்டத்தின் கல்விக்குழு மேற்கொண்டுள்ளது.

09.01.2020 சனி மாலை 03.00 நண்பா்கள் வட்டத்தின் தலமைச் செயலகத்தில் மத்தி கிழக்கு பெற்றோா்களுக்கம் 10.01.2020 ஞாயிறு காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு மேற்குப் பகுதி பெற்றோா்களுக்கும் கலந்துரையாடல் நிகழ்வு இடம் பெறவுள்ளதால் தயவாக பெற்றோா்கள் இணைந்து எதிா்கால கல்விச் செயற்றிட்டத்தில் பிள்ளைகளை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீா்கள்

தற்போதைய கொரோன வைரஸ் தாக்கத்தினைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பன முறையில் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீா்கள்

Share this Article