சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு  பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நெடுந்தீவு உதய சூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் ஞாயிற்றுகிழமை (07/09) பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் அ.புஸ்பகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந.பிரபாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சமுத்திரா விருந்தினர் விடுதி முகாமையாளர் எஸ்.லோயிதன் மற்றும் நெடுந்தீவு அலை ஓசை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் யே.சுதாகரன்  ஆகியோரும் உதய சூரியன் விளையாட்டு கழக தலைவர் மற்றும் நெடுந்தீவு பிரதேச இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்

மேலும் குழு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

உதைபந்தாட்ட இறுதிப்போட்டி சென் ஜேம்ஸ் மற்றும் சென் ஜோன்ஸ் இளைஞர் கழக ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில்

சென் ஜேம்ஸ் அணி தண்ட உதை மூலம் 3:2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது சிறப்பாகும்.

Share this Article
Leave a comment