வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் சஜித் கலந்துரையாடல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விரிவாக முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான தேவையான தலையீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், ரவூப் ஹக்கீம், இராமநாதன் அர்ச்சுனா, காதர் மஸ்தான், சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

Share this Article
Leave a comment