உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பலி!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதான இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் குகப்பிரியன் (வயது-20) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரம் இயக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்பாராதவிதமாக குறித்த இளைஞன் உழவு இயந்திரத்திற்குள் தவறி வீழ்ந்ததில் இயந்திரத்தில் சிக்குண்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Share this Article
Leave a comment