நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலயத்தின் சிறுவர்தின நிகழ்வுகள் நேற்றையதினம் (ஒக். 01) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

வித்தியாலய அதிபர் சி.சிவகுமார் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் டா. தேவராஜ் கலந்து சிறப்பித்திருந்தார்.

விருந்தினர்கள் மற்றும் சிறார்கள் சிறப்பாக நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.


இதன்போது சிறப்புரைகள் , வாழ்த்துரைகள் என்பவற்றுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.

