நெடுந்தீவுக்கான சுற்றுலாவிகள் கடற்போக்குவரத்து சீராகுமா?

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாவிகளுக்கான கடற்போக்குவரத்துக்கான படகுகள் சீரின்மையால் குறிகாட்டுவான் துறைமுகத்துடன் திரும்பிச் செல்லும்நிலை கடந்த பல வாரங்களாக இடம்பெற்றுவருகின்றதுடன் இதற்கேற்ற சீரான  ஒழுங்குகளை செய்யவும் யாரும் முன்வரவில்லை.

சுறரறுலாத் துறையினை ஊக்கப்படுத்தி அதனூடாக நெடுந்தீவுக்கான வருமானத்தை உயர்த்தி தேவைகளை நிறைவேற்றும் வகையில் நெடுந்தீவு பிரதேச சபை செயற்படுமா என்பது விளங்கவில்லை என சுற்றுலா துறைசார் நெடுந்தீவு முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நயினாதீவைச் சேர்ந்த படகுகளும்  நெடுந்தீவுக்கான சுற்றுலாவிகளை ஏற்றிவந்தநிலையில் பெருமளவானோர் தீவுக்கு வந்துசென்றமை யாவரும் அறிந்த விடயம். இதேவேளை தற்போது நெடுந்தீவில் உள்ள படகுகளும் , அனலைதீவைச் சேர்ந்த படகுகளும் சுற்றுலாவிகளை ஏற்றியிறக்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சில படகுகள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு கட்டண வரையறையின்றி எழுந்தமானமான , அதிகரித்த படகு வாடகையை அறவிட்டு வருவதாக சுற்றுலாவிகள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாவிகளுக்கான வாடகைப் படகுகள் இன்மையாலேயே அவர்களது நலன் கருதியும் நெடுந்தீவுக்கான பயணிகள் சேவை அரச அதிகாரிகளால் அதிகரிக்கப்பட்டதாக தெரியவருகின்றது ஆனால் படகின்மைக்கான காரணத்தை அறிந்து அதனை தீர்க்க வழிசெய்ய முடியாத நிர்வாகமாக உள்ளமை கவலைக்குரியது.


சுற்றுலாவிகளின் வருகை குறைவடைந்தமையால் நெடுந்தீவில் உள்ள வாடகை வண்டி உரிமையாளர்கள், தங்குமிட உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்நிலைமைகளை உரிய அதிகாரிகளும், பொறுப்பானவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் விரைவில் ஆராய்ந்து நெடுந்தீவுக்கான சுற்றுலாத்துறையினை  முன்னேற்ற வழிசமைக்கவேண்டுமென நெடுந்தீவில் உள்ள துறைசார்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளமை  குறிப்பிடததக்கதாகும்.

Share this Article