நெடுந்தீவு பிரதேச சபையினரால் “வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்”எனும் தொனிப்பொருளைக் கொண்ட உள்ளூராட்சி வாரம் -2025 இன் நிகழ்வுகள் நெடுந்தீவு பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (செப். 15) ஆரம்பமாகி 4ஆம் (செப். 17 ) , 05ஆம் (செப். 18) நாள் நிகழ்வுகளாக விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கான கிளித்தட்டு , கயிறு இழுத்தல் , முட்டி உடைத்தல் , கிடுகு பின்னுதல் ஆகிய போட்டிகள் 04, 05 ஆம் நாள் நிகழ்வுகளாக நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் நெடுந்தீவு குழந்தையேசு சன சமூக நிலையம் முதலாம் இடத்தினையும் நெடுந்தீவு கிழக்கு சன சமூக நிலையம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

பெண்களுக்கான கிளித்தட்டு போட்டியில் நெடுந்தீவு சென். அன்ரனிஸ் சன சமூக நிலையம் முதலாம் இடத்தினையும் நெடுந்தீவு மேற்கு சன சமூக நிலையம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

இருபாலாருக்குமான கலப்பு கிடுகு பின்னுதல் போட்டியில் நெடுந்தீவு வளர்மதி சன சமூக நிலையத்தைச் சேர்ந்த இ.நாகரஞ்சினி முதலாம் இடத்தினையும் நெடுந்தீவு கிழக்கு சன சமூக நிலையத்தைச் சேர்ந்த அ.பத்மாவதி இரண்டாம் இடத்தினையும் , ஐக்கியதீப சனசமூக நிலையத்தைச் சேர்ந்த த.சுஜீவன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இருபாலாருக்குமான கலப்பு முட்டி உடைத்தல் போட்டியில் நெடுந்தீவு சென்ஜேம்ஸ் சனசமூக நிலையத்தைச் சேர்ந்த பி.ஜதுசனா முதலாம் இடத்தினையும் நெடுந்தீவு குழந்தையேசு சனசமூக நிலையத்தைச் சேர்ந்த அ.சுஜீனா இரண்டாம் இடத்தினையும் , சென்ஜேம்ஸ் சனசமூக நிலையத்தைச் சேர்ந்த அ. பிரவீன்ராஜ் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
